இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – பாக்யராஜ் மறைவுக்கு இபிஎஸ் உருக்கம்
தமிழ்நாடு, 27 ஜூன் (ஹி.ச.) இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. கே. பாக்ய
இபிஎஸ்


தமிழ்நாடு, 27 ஜூன் (ஹி.ச.)

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்,பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. கே. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவரின் முடிவுறாத படத்தின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற புதிய திரைக்கதையை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற திரைப்படத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் திரு. பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார்.

இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam