Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 27 ஜூன் (ஹி.ச.)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பங்கேற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், இதுபோன்ற முக்கியப் பதவிகளில் நியமனங்கள் செய்யும்போது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
நமது மாநிலத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் டெல்லியில் அழுத்தமாகப் பதிய வைக்க தமிழ்நாட்டுச் சூழலை நன்கு அறிந்தவர்களே தகுதியானவர்கள்.
இந்த விவகாரத்தில் மாற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படும் போது, அது தேவையில்லாத விவாதங்களை உருவாக்கி, தமிழ்நாடு அரசின் நன்மதிப்பைப் பாதிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடும்.
ஏற்கனவே, கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் நீடித்து வரும் வேளையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரைத் தமிழக அரசு டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை, இது அது தமிழ்நாடு அரசின் நன்மதிப்பை பாதிக்கும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு நிலம் பார்ப்பது, அனுமதிப்பது போன்ற விஷயங்களில் தாமதம் இருந்தது இதனை விரைவு படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
மின்சாரத்துறை வெள்ள அறிக்கை வெளியிட்டது குறித்து கேள்விக்கு,
ஊழலில் எந்த ஒரு சமரசமும் செய்வது எந்த நாட்டுக்கும் நல்லதில்லை யார் ஊழல் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எல்லா ஆட்சிக் காலத்திலும் சொல்லப்படுகிறது ஆனால் நடவடிக்கையில் தாமதம் உள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளிப்படையான சிறந்த நிர்வாகத்தை நடத்த வேண்டும் ஊழலில் எந்த ஒரு சமரசமும் இல்லை என்று நிலைப்பாட்டில் இருப்பதால் எந்த துறையாக இருந்தாலும் நேர்மையாக வெளிப்படுத்தல்மையுடன் நடக்க வேண்டும்.
அமலாக்கத்துறை வழக்கில் ஆளுநர் இதுவரை வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டுகிறார் என்ற கேள்விக்கு,
ஆளுநர் என்பவர் பாஜகவின் உடைய பிரதிநிதி பாஜகவின் அறிவிக்கப்படாத மாநில தலைவராக தான் செயல்படுகிறார்.
அரசியல் ரீதியான காரணம் அல்லது திராவிட முன்னேற்ற கழகம் நிர்பந்திக்கலாம் என நினைக்கலாம். அவர்கள் நினைப்பது எல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு கடினமான கூட்டத்தொடராகவே இருக்கலாம் எனக் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN