Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி அசாம் ரைபிள்ஸ் பிரிவில் வீரராக பணியாற்றி வந்தார்.
நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தார்.
உயிர் நீத்த அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.
சுடலைமணி மரணத்தால், அவரது குடும்பத்தினர், கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
வீரரின் தியாகத்தை போற்றும் வகையில் அமைச்சர் ஸ்ரீநாத் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வீரரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
வீர மரணம் அடைந்த சுடலைமணிக்கு, பேச்சியம்மாள் என்ற மனைவியும், செந்தட்டி, 6, என்ற மகனும், ரேணுகா, 3, என்ற மகளும் உள்ளனர்.
வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ஸ்ரீநாத், அரசு சார்பில் உரிய மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
வீரர் சுடலைமணியின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
Hindusthan Samachar / vidya.b