Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 27 ஜூன் (ஹி.ச.)
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார்.
கிழக்கு ஆப்பிரிக்கா கடலோரத்தில் அமைந்துள்ள செஷல்ஸ் நாடு தனது 50-வது தேசிய தினத்தை நாளை மறுதினம் கொண்டாடுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று காலை செஷல்ஸுக்கு புறப்பட்டார்.
பயணத்தின் போது, செஷல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பு மூலம் இந்தியா–செஷல்ஸ் இடையேயான நட்புறவும், இருதரப்பு ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA