Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் - மதுரையின் துணை இயக்குநராக குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக இவர் கடலூர் மாவட்டத்தில், மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
தற்போது பதவி உயர்வின் மூலம் தென்மண்டல துணை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தென்மண்டலத்தைச் சார்ந்த மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில், தீயணைப்பு மற்றும் மீட்பு அழைப்புகளில் துரிதமாகவும், விரைவாகவும் செயல்பட அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J