இந்தியாவின் மிகச்சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருவர்-பி.டி.உஷா...!
தமிழ்நாடு, 27 ஜூன் (ஹி.ச.) பி.டி. உஷா இந்தியாவின் மிகச்சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருவர் மற்றும் தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவர் ஆவார். அவரது அசாத்திய வேகத்தின் காரணமாக அவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் தடகளத்தின் ர
P


தமிழ்நாடு, 27 ஜூன் (ஹி.ச.)

பி.டி. உஷா இந்தியாவின் மிகச்சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருவர் மற்றும் தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவர் ஆவார்.

அவரது அசாத்திய வேகத்தின் காரணமாக அவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் தடகளத்தின் ராணி என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்

இந்திய தடகள வீராங்கனையான பி.டி.உஷா 1964ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி கேரளாவில் உள்ள பய்யோலியில் பிறந்தார்.

ஒலிம்பிக் சாதனை: 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்று, ஒரு வினாடியின் நூறில் ஒரு பங்கு (0.01 வினாடி) வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்து 4-ஆம் இடம் பிடித்தார்.

1985 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார்.

1984 ஆம் ஆண்டு கேரள மாநில தடகள போட்டியில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டம் அவர் படைத்த சாதனையை பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் இந்தியத் தட களங்களின் அரசிஎனக் குறிப்பிடப்படுகிறார்.

மேலும் தங்க மங்கை மற்றும் பயோலி எக்ஸ்பிரஸ் என்றும் போற்றப்படுகிறார்.

இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம்: 2022 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் மற்றும் முதல் சர்வதேச தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை (Rajya Sabha) நியமன உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.

இவர் 2022 டிசம்பர் 10ஆம் நாள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளம் தடகள வீரர்களை உருவாக்குவதற்காக Usha School of Athletics என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.

Hindusthan Samachar / Durai.J