சென்னை நொளம்பூரில் கொடூர கொலை - தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) சென்னையை அடுத்த நொளம்பூர் யூனியன் சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது சஞ்சய் தரப்புக்கும், உதயா தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த உதயா
Police shoot and apprehend the culprit


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

சென்னையை அடுத்த நொளம்பூர் யூனியன் சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது சஞ்சய் தரப்புக்கும், உதயா தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

ஆத்திரமடைந்த உதயா மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சய்யின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் சஞ்சய், அவரது நண்பர் சரத் மற்றும் சஞ்சய்யின் தந்தை ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக மூவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரத் பரிதாபமாக உயிரிழந்தார்.

சஞ்சய் மற்றும் அவரது தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உதயராஜ், நவீன் குமார், சூர்யா, கார்த்திக், ராஜா, ராகேஷ், மோஷாக், சூரிய பிரகாஷ் ஆகிய 8 பேருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரூபேஷ் என்பவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.

போலீசார் விடுத்த எச்சரிக்கையையும் மீறி அவர் தப்பிக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

காலில் குண்டு பாய்ந்த நிலையில் ரூபேஷ் பிடிபட்டார். அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நொளம்பூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் நொளம்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b