தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் காவல்துறைக்கு தேர்வான 9 பேருக்கு பாராட்டு
புதுக்கோட்டை 27 ஜூன் (ஹி.ச.) புதுக்கோட்டையில் முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் இலவச பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று வருவதற்கிடையில், இந்த ஆண்டு காவல்துறைக்கு தேர்வான 9 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அம்பேத்கர் மக
Hh


புதுக்கோட்டை 27 ஜூன் (ஹி.ச.)

புதுக்கோட்டையில் முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் இலவச பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று வருவதற்கிடையில், இந்த ஆண்டு காவல்துறைக்கு தேர்வான 9 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனரும், முத்து கல்வி அறக்கட்டளையின் உருவாக்கத்திற்கு காரணமான ஆசிரியர் முத்து அவரது

8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் இளமுருகு முத்து கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அறக்கட்டளையில் இலவச பயிற்சி பெற்று காவல்துறைக்குத் தேர்வான தொண்டைமான்ஊரணி விக்னேஷ், வாகவாசல் பிரகாஷ், கறம்பக்குடி வினோத், கம்மங்காடு மாலினி, புதுக்கோட்டை திருப்பதி, கோகுல், மேட்டுப்பட்டி சந்திரதேவி, புத்தாம்பூர் உமாசந்திரன் மற்றும் செம்பட்டிவிடுதி மாதவன் உள்ளிட்ட 9 பேருக்கு புத்தகங்கள் வழங்கி பாராட்டினர்.

நிகழ்வில் மாநிலச் செயலாளர் ஆசிரியர் மெய்யர், மாவட்டத் துணைச் செயலாளர் லோகநாதன், மாவட்டச் செயலாளர் சுப்புநாதன், மாவட்ட இணைச் செயலாளர் நாகராசன், ஒன்றியச் செயலாளர்கள் சேகர், பழனியாண்டி, தங்கப்பன், கே. நாகராசன், மணிமுத்து மற்றும் மாவட்ட தொழிற்சங்க அணிச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இளமுருகு முத்து,

தனது தந்தை ஆசிரியர் முத்து சமூக நல்லிணக்கத்திற்காகவும், சாதி மற்றும் மத மோதல்களைத் தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் என்று நினைவு கூர்ந்தார்.

அவரது சேவை தொடர வேண்டும் என்ற நோக்கில் டாக்டர் க.முத்து கல்விக்கழகம் தொடங்கப்பட்டு, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி அரசுப் பணிகளில் சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், ஆண்டுதோறும் 40 முதல் 50 பேர் வரை அரசுப் பணிகளில் தேர்வாகி வருவதாகவும், இந்த ஆண்டு மட்டும் காவல்துறையில் 9 பேர் தேர்வாகியுள்ளது டாக்டர் க.முத்துவின் கனவு மற்றும் லட்சியத்தை நிறைவேற்றிய பெருமையாகும் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ