சிவசேனா எம்.பி.க்கள் பதவி விலகிய விவகாரம் - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி கண்டனம்
மும்பை, 27 ஜூன் (ஹி.ச.) மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவுசாகேப் ராஜாராம் வக்சௌரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பல்கர், சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக் மற்றும் நாகேஷ்
சிவசேனா எம்.பி.க்கள் பதவி விலகிய விவகாரம் -  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி கண்டனம்


மும்பை, 27 ஜூன் (ஹி.ச.)

மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பாவுசாகேப் ராஜாராம் வக்சௌரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பல்கர், சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக் மற்றும் நாகேஷ் பாபுராவ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 6 எம்.பி.க்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர்.

இந்த நகர்வு மூலம் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் பலம் மக்களவையில் மூன்று எம்.பி.க்களாக குறைந்துள்ளது.

2022-ம் ஆண்டு கட்சி பிளவுக்குப் பிறகு சிவசேனா (யுபிடி)க்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

எம்.பி.க்கள் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆபரேஷன் டைகர் வெற்றி பெற்றதாக கூறினார்.

அரசியலமைப்பு விதிகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளின்படியே எம்.பி.க்கள் கட்சியில் இணைந்ததாகவும், வளர்ச்சி மற்றும் தொகுதிப் பணிகளில் கவனம் செலுத்தவே அவர்கள் இணைந்ததாகவும் ஷிண்டே தெரிவித்தார்.

சிவசேனா (யுபிடி) முன்பு ஒன்பது மக்களவை தொகுதிகளை கொண்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் மூன்று எம்.பி.க்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கட்சி மாறிய ஆறு எம்.பி.க்கள் மீது சிவசேனா (யுபிடி) தலைமை ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இந்த கிளர்ச்சி இரு அணிகளுக்கும் இடையிலான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சி மாறியவர்கள் கட்சியின் கொள்கைக்கும், மக்கள் அளித்த ஆணைக்கும் துரோகம் செய்துவிட்டதாக சிவசேனா (யுபிடி) தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேநேரம், ஷிண்டேயின் தலைமை மீதான நம்பிக்கை மற்றும் உத்தவ் தாக்கரே அணி மீதான அதிருப்தி காரணமாகவே எம்.பி.க்கள் இணைந்ததாக ஷிண்டே அணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் ஆறு மக்களவை உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு தாவியதை மகாராஷ்டிரா சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் அபு அஸ்மி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து,இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

இது தவறான வழி. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும். இது போன்ற செயல்கள் முடிவுக்கு வர வேண்டும். கட்சி மாறியவர்கள் பதவி விலகிவிட்டு, எந்த கொள்கையில் இணைய விரும்புகிறார்களோ அந்த கொள்கையின் அடிப்படையில் மீண்டும் மக்களிடம் சென்று வெற்றி பெற வேண்டும்.

என்று கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b