Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 27 ஜூன் (ஹி.ச.)
கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது
அவர் கூறியதாவது,
தமிழகத்தில் முதல்வரின் தலைமையில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. வருவாய்த் துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து மாணவர்களின் முகவரி, ரத்த வகை, ஆதார் விவரங்கள் மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அடையாள அட்டையை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
முன்னதாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பள்ளிகளிலேயே வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்கும் நடைமுறை கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் வருவாய் அலுவலகங்களுக்கு அலைந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போயுள்ளது.
புதிய அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறும் என சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும், மாணவர்களிடையே எந்தவித பாகுபாடும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே சாதி விவரங்கள் சேர்க்கப்படாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். பள்ளிகளில் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
மேலும், மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்துகள் அல்லது அவசரநிலைகள் ஏற்பட்டால், இந்த அடையாள அட்டையில் இடம்பெறும் முகவரி, ரத்த வகை, ஆதார் உள்ளிட்ட தகவல்கள் மூலம் உடனடி உதவிகளை வழங்கவும், குடும்பத்தினரை விரைவாக தொடர்புகொள்ளவும் வசதியாக இருக்கும் என்றார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து வருவாய்த் துறையும் பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P