பௌர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு
திருவண்ணாமலை, 27 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலையில் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ரயில்வே நிர்வாகம் வெளியிட
பௌர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு


திருவண்ணாமலை, 27 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலையில் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த சிறப்பு ரயில் வரும் ஜூன் 29-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அன்றைய தினம் பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

மறுமார்க்கமாக, அதே நாளில் திருவண்ணாமலையிலிருந்து பகல் 12.40 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில், பிற்பகல் 2.45 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில், வழியில் வெங்கடாசலபுரம், மாம்பலப்பட்டு, ஆதிச்சனூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பௌர்ணமி கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம் என்பதால், பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு தேவையில்லை என்பதால் பக்தர்கள் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்து பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம்.

Hindusthan Samachar / vidya.b