Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 27 ஜூன் (ஹி.ச)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் புலவேந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் தரப்பில் இருந்து கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றன.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய கட்சி நிர்வாகம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தமிழக வெற்றி கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் புலவேந்திரன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி கடலூர் மாவட்ட செயலர் உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு கட்சியில் இடமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பொதுமக்களிடம், குறிப்பாக விவசாயிகளிடம் கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் த.வெ.க கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b