விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 27 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது மழைக்கால சீசன் ஆனது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,
Courtallam Aiyappa


தென்காசி, 27 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது மழைக்கால சீசன் ஆனது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த சீசனில் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டு வருகிறது.

இருந்தபோதும், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குளித்து வரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த அளவை தண்ணீரானது கொட்டி வருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து வருகின்றனர்.

மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தண்ணீரில் அளவை பார்த்துவிட்டு தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN