2.5 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட 16 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது
கள்ளக்குறிச்சி, 27 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்பெஷல் டீம் சலாம் உசேன் தலைமையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழு
Prison


கள்ளக்குறிச்சி, 27 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்பெஷல் டீம் சலாம் உசேன் தலைமையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கே சந்தேகத்திற்கு இடமான 16 வயது சிறுவனை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது சுமார் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்மணி (23) என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

மேலும் உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாசிபாளையம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சந்தோஷ் (16) ஆகிய இருவரையும் கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

16 வயதில் சிறுவன் கஞ்சா கடத்திய இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN