உலகின் டாப்-3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் விராட் கோலி
ஜோகன்னஸ்பர்க் , 27 ஜூன் (ஹி.ச.) தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ், தனது பார்வையில் உலகின் சிறந்த டாப்-3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி முத
A


ஜோகன்னஸ்பர்க் , 27 ஜூன் (ஹி.ச.)

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ், தனது பார்வையில் உலகின் சிறந்த டாப்-3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலியை தொடர்ந்து, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா 3-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக, விராட் கோலியை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக அவர் தேர்வு செய்திருப்பது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இருவரும் நீண்ட காலமாக ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்காக இணைந்து விளையாடியிருந்த நிலையில், இந்த பாராட்டு கோலி ரசிகர்களிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA