கூமாபட்டியில் முன் பகை காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு
விருதுநகர், 27 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் இயேசு என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொன்மாடன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பகை முற்றிய நிலையில், பொன்மாடன
Youth hacked to death in Koomapatti


விருதுநகர், 27 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் இயேசு என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொன்மாடன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பகை முற்றிய நிலையில், பொன்மாடன் இயேசுவை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த கூமாபட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பொன்மாடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தால் கூமாபட்டி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்விரோதம் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b