விழுப்புரம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்
விழுப்புரம், 28 ஜூன் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம், பிடாகம் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 பேர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கிய
விழுப்புரம் அருகே  தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில்  3 பேர் பலி, 2 பேர் படுகாயம்


விழுப்புரம், 28 ஜூன் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம், பிடாகம் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 பேர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் செல்வம், கவிதா மற்றும் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாண்டியன் ஆகிய மூவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரில் பயணித்த பிரவீன் மற்றும் செல்வி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b