பாலவாக்கத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்!
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளி போலியோ சொட்டு மருந்து முகாமில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார் முதலமைச்சர் விஜய். இந்தியாவில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
CM Vijay


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளி போலியோ சொட்டு மருந்து முகாமில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார் முதலமைச்சர் விஜய்.

இந்தியாவில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடுமுழுவதும் இன்று நடைபெறுகிறது. சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று காலை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN