Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக முன்னாள் மாநில நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
மதிமுக முன்னாள் மாநில நிர்வாகிகளான அழகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்களில் அழகுசுந்தரம் மற்றும் புலவர் செவந்தியப்பன் ஆகியோர், பொடா (POTA) சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் சிறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு மறுநாளே, மதிமுகவின் முன்னாள் மாநில நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam