மெட்ரோ ரயிலில் பயணித்தவருக்கு திடீர் உடல்நலக்குறைவு - சைதாப்பேட்டை நிலையத்தில் உடனடி மருத்துவ உதவி
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. கிண்டி மெட்ரோ நிலையத்தி
Me


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

கிண்டி மெட்ரோ நிலையத்திலிருந்து பயணம் செய்து கொண்டிருந்த திரு. ஆறுமுகம் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வந்தடைந்த சைதாப்பேட்டை மெட்ரோ நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அவரை கவனித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும், அவசர மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், அவசர சூழல்களில் உடனடி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ