Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச)
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தனித்தனியாக நடைபெற்ற ரயில் விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மின்சார ரயிலில் அடிபட்டு சுமார் 35 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், திருவள்ளூர் ரயில் நிலையப் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை குரோம்பேட்டை அருகே தண்டவாளப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலையும் கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள், அவர்கள் எவ்வாறு தண்டவாளப் பகுதிக்குள் சென்றனர் என்பது உள்ளிட்ட கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டவாளங்களை அனுமதியின்றி கடப்பதைத் தவிர்க்கவும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ