டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் மாநிலத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சி
வீரபாண்டி


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் மாநிலத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசியல் செல்வாக்குடன் பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் செய்து வரும் வெங்கட் கே. நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகச் சூழல், கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து போதிய புரிதல் இல்லாத ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, மாநிலத்தின் தேவைகள் மற்றும் தனித்துவத்தை நன்கு அறிந்த, பொருத்தமான ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P