Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.)
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஆளுங்கட்சியை விமர்சித்து பேசியதற்கு பதிலடியாக, தமிழக வெற்றி கழகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவை குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்பு சட்ட நடைமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அரசின் மீது முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக நையாண்டி அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், திமுக மற்றும் அதன் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அரசியல் கிண்டல், நையாண்டி மற்றும் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள அந்த பதிவில், திமுகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுகள் குறித்தும் தாக்குதலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இடைத்தேர்தல்களிலும் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்றும், இளைஞர்கள் தகுந்த நேரத்தில் பதிலளிப்பார்கள் என்றும் தமிழக வெற்றி கழகம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P