டேட்டா அடையாள அட்டையில் சாதி விவரம் இடம்பெறாது – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
ஈரோடு, 28 ஜூன் (ஹி.ச.) மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் சாதி தொடர்பான எந்த வியாபாரங்களும் இடம்பெறாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் செய்திகள் அவர்களை சந்தித்த அவர் கூறியதாவது மாநில மக்களின
செங்கோட்டையன்


ஈரோடு, 28 ஜூன் (ஹி.ச.)

மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் சாதி தொடர்பான எந்த வியாபாரங்களும் இடம்பெறாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் செய்திகள் அவர்களை சந்தித்த அவர் கூறியதாவது

மாநில மக்களின் முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள 'டேட்டா' அடையாள அட்டையில் (Data Card) சாதி விவரம் இடம்பெறாது என்று நிதியமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

புதிய டேட்டா அடையாள அட்டை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அதில் சாதி விவரம் இடம்பெறும் என்ற தகவலுக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முகவரி, ரத்த வகை, ஆதார் அட்டை எண் உள்ளிட்ட அரசின் சேவைகளுக்குத் தேவையான அடிப்படை தகவல்கள் மட்டுமே டேட்டா அட்டையில் இடம்பெறும். சாதி விவரம் எந்த வகையிலும் இடம்பெறாது என்றார்.

மேலும், அரசின் நலத்திட்டங்களை விரைவாகவும் துல்லியமாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், பல்வேறு துறைகளின் தரவுகளை ஒருங்கிணைத்து நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த டேட்டா அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதனால், டேட்டா அடையாள அட்டையில் சாதி விவரம் இடம்பெறும் என்ற தகவல்கள் தவறானவை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam