பெங்களூரில் அரசு பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ஒரே மாதத்தில் ரூ.8.94 லட்சம் அபராதம் வசூல்
பெங்களூரு , 28 ஜூன் (ஹி.ச.) கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரை கண்டறியும் நோக்கில், கடந்த மே மாதம் முழுவதும் மாநிலத்திற்குள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் சிறப்பு சோதனை மேற்க
A


பெங்களூரு , 28 ஜூன் (ஹி.ச.)

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரை கண்டறியும் நோக்கில், கடந்த மே மாதம் முழுவதும் மாநிலத்திற்குள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின்போது மொத்தம் 42 ஆயிரத்து 512 அரசு பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 4 ஆயிரத்து 476 பேர் கண்டறியப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

I

இந்த நடவடிக்கையின் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட இருந்த ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுக்க இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA