தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி நாளை பதவியேற்பு
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) அண்மையில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவு வெளியான உடனேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கே. செல்வப்பெருந்தகை தெரிவித்ததாகத் தகவல் வெளியானது
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி நாளை பதிவியேற்பு


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

அண்மையில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவு வெளியான உடனேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கே. செல்வப்பெருந்தகை தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையில் செல்வப்பெருந்தகை மாற்றப்படாமல் இருந்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ், தவெக அரசுக்கு ஆதரவளித்தது. தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இதனிடையே, செல்வப்பெருந்தகைக்குப் பதிலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை(ஜூன் 29) மாலை பதவியேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை தற்போது அறிவித்துள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர், மக்களவை காங்கிரஸ் கொறடாவாகவும் உள்ளார். ஆந்திரம், அந்தமான்-நிக்கோபார் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் திரு மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்க முன்னணி அமைப்புகளில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து துறைகள் மற்றும் அணிகளின் நிர்வக நகர மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து தொண்டர்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள் : 29.06.2006 (திங்கட்கிழமை)

நேரம் : மாலை 4.00

இடம் : சத்தியமூர்த்தி பவன் சென்னை

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு புதிய மாநிலத் தலைவரை உற்சாகமாக வரவேற்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b