Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.)
சபரீசன் சார்பில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், சபரீசன் குறித்து இரு அமைச்சர்களும் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் என்ற காரணத்தால் தன் மீது அவதூறு பரப்பப்படுவதை ஏற்க முடியாது என்றும் சபரீசன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இரு அமைச்சர்களும் தாங்கள் தெரிவித்த கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், அதுதொடர்பான வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி இதுபோன்ற அவதூறு கருத்துகளை வெளியிடமாட்டோம் என்று எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 15 நாட்களுக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், இரு அமைச்சர்களுக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வக்கீல் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam