பாட்டிலுக்கு ரூ.10 வாங்குனா டிஸ்மிஸ் – அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
சென்னை, 28 ஜூன் (ஹி.ச.) மதுபாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
Vignesh


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)

மதுபாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் ரத்து செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

சுற்றுச்சூழல் வரி இனி மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலை (MRP)க்குள்ளேயே இடம்பெறும். இதனால், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்க எந்தவித அனுமதியும் இருக்காது.

விதிமுறைகளை மீறி கூடுதல் தொகை வசூலிக்கும் ஊழியர்கள் மீது முதலில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் பணி நீக்கம் வரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசுக்கு வரவேண்டிய ஒரு ரூபாய் கூட தனியார் கைகளுக்கு செல்லக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் விக்னேஷ் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ