பழனி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல், 28 ஜூன் (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிறு விடுமுறை காரணமாக அதிகாலை முதலே கிரிவீதிகள், வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பொதுத் தரிசன வழியில் சு
Palani Murugan Temple


திண்டுக்கல், 28 ஜூன் (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிறு விடுமுறை காரணமாக அதிகாலை முதலே கிரிவீதிகள், வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பொதுத் தரிசன வழியில் சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், வரிசை ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பழனி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலைக்கோவில் தரிசனத்தை முடித்துப் படிப்பாதை வழியாகக் கீழே இறங்கி வரும் பக்தர்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் போலியோ சொட்டு மருந்தைச் செலுத்திச் சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN