Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 28 ஜூன் (ஹி.ச.)
புதுச்சேரியில் 424 முகாம்களில் இன்று போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. சொட்டு மருந்து முகாமினை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
போலியோ குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துகிறது.
அதன்படி, இன்று புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஐந்து வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த 74,124 குழந்தைகளும் பயனடைவா். கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் 424 முகாம்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் என 31 இடங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மூலம் 74,698 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN