வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி, கிணற்றில் சடலமாக மீட்பு
ராமநாதபுரம், 28 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் எம் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ்- கார்த்திகை செல்வி என்பவர்களது இரண்டாவது மகள் சாய் தீப்தி. 7 வயதான இவர் நேற்று மதுரையில் இருந்து வந்ததாகவும் வந்த அவர் தன்னுடைய பாட்டியுடன் வீட்டில் உள்ள திண்ணை
Ramanathapuram GH


ராமநாதபுரம், 28 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் எம் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ்- கார்த்திகை செல்வி என்பவர்களது இரண்டாவது மகள் சாய் தீப்தி. 7 வயதான இவர் நேற்று மதுரையில் இருந்து வந்ததாகவும் வந்த அவர் தன்னுடைய பாட்டியுடன் வீட்டில் உள்ள திண்ணையில் உறங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அவரது பாட்டி எழுந்து பார்த்த பொழுது குழந்தையை காணவில்லை. இதனை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு உறவினர்கள் மற்றும் நகர் காவல் நிலைய போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிங்கப்பெண் படை, அதிரடிப்படை போலீசார்,மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அதி காலை முதல் தற்போது வரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள கிணறுகளை சோதனை செய்தபோது அதே பகுதியில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுமி பிணமாக கிடப்பதை அறிந்து தற்போது மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய பாட்டியுடன் வீட்டில் உறங்கிய ஏழு வயது பெண் குழந்தை காணாமல் போய் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Hindusthan Samachar / ANANDHAN