Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச)
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகர் பகுதியில் காணாமல் போன 5 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பக்கத்து வீட்டுக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், அருகில் உள்ள வீட்டின் கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள், சிறுமியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி எவ்வாறு கிணற்றில் விழுந்தார், இதில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன சில மணி நேரங்களிலேயே சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ