செஷெல்ஸ் அரசின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி; காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு அர்ப்பணிப்பு
டெல்லி, 28 ஜூன் (ஹி.ச.) செஷெல்ஸ் அரசு மற்றும் அந்நாட்டு அதிபர் ஹெர்மினி வழங்கிய Guardian of the Blue Horizon என்ற உயரிய விருதைப் பெற்றதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில
மோடி


டெல்லி, 28 ஜூன் (ஹி.ச.)

செஷெல்ஸ் அரசு மற்றும் அந்நாட்டு அதிபர் ஹெர்மினி வழங்கிய Guardian of the Blue Horizon என்ற உயரிய விருதைப் பெற்றதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த விருதை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு, எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பை தங்களது பொறுப்பாகக் கருதும் அனைத்து நாடுகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றம் என்பது உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய அவசரமான சவாலாகும். பூமியை மேலும் பசுமையாகவும், நிலைத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு கொள்கைகள், உலகளாவிய முயற்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P