சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZ) பெரிய சீர்திருத்தம்? தொழில் துறையினருடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
டெல்லி, 28 ஜூன் (ஹி.ச.) இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) தொடர்பான கொள்கைகளில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள மத்திய வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, தொழில் நிறுவனங்கள், ஏ
Sez


டெல்லி, 28 ஜூன் (ஹி.ச.)

இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) தொடர்பான கொள்கைகளில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள மத்திய வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் வரும் ஜூன் 30-ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்றுமதி ஊக்கத் திட்டங்களை ஒருங்கிணைத்தல், முதலீட்டாளர்களுக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், தொழில் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

உலகளாவிய போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் SEZ-களை மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு மையங்களாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைக்கும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P