மணல் திருட்டு விவகாரத்தில் திமுக சேர்மன் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர், 28 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் கடந்த 26.6.26 அன்று வாழைகுளம் கண்மாய் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பெயரை பயன்படுத்தி மணல் திருட்டு நடைபெறுவதாக எழுந்த புகார் எழுந்தது.
Srivilliputhur Police Station


விருதுநகர், 28 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் கடந்த 26.6.26 அன்று வாழைகுளம் கண்மாய் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பெயரை பயன்படுத்தி மணல் திருட்டு நடைபெறுவதாக எழுந்த புகார் எழுந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் எந்தவித அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக உறுதி செய்த நிலையில், அங்கு வந்த மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி அவர்களின் கணவர் தங்கமாங்கனி சட்டமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

தற்போது விக்னேஷ்குமார் நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக மம்சாபுரம் பேரூராட்சி நகர செயலாளர் கார்த்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி தலைவரின் கணவர் தங்கமாங்கனி, குட்டி என்ற ராஜேந்திரன் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN