மேலவளவு நினைவு நாள் - ஜூன் 30-ல் மேலூரில் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அறிவிப்பு
மதுரை, 28 ஜூன் (ஹி.ச) மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை ஜூன் 30 ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் மூட மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்
மேலவளவு நினைவு நாள் - ஜூன் 30-ல் மேலூரில் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அறிவிப்பு


மதுரை, 28 ஜூன் (ஹி.ச)

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை ஜூன் 30 ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் மூட மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட ஐந்து பேரின் நினைவு நாள் ஜூன் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளையொட்டி மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழாமல் அமைதியைப் பராமரிக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரின் உத்தரவின்படி, மேலூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள், அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும் ஜூன் 30 காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நினைவு நாளையொட்டி பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b