திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் – 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருச்செந்தூர், 28 ஜூன் (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்யில் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுவாமி தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள
திருச்செந்தூர்


திருச்செந்தூர், 28 ஜூன் (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்யில் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுவாமி தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகவும், சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். பக்தர்கள் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், நாமக்கல் மாவட்டம் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து ஆடி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிய நிகழ்வு, கோவிலுக்கு வந்திருந்த பிற பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கோவிலில் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் ஒழுங்கான தரிசனம் மேற்கொள்ள காவல்துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam