Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 28 ஜூன் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது, குறிப்பாக தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா கர்நாடகா கேரளா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலை முதல் குவிந்த பக்தர்கள் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர், இராஜ கோபுரம் வழியாக பொது தரிசனத்தில் அனுமதிக்க கூடிய பக்தர்கள் கோவிலினுள் பல்வேறு இடங்களில் 4 முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் கோவிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் வாயில் வழியாக 50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்க கூடிய பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், இன்றைய தினம் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர், அதேபோன்று அருணாசலேஸ்வரர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நாயகருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கிளி கோபுரம் அருகே செவிலியர்கள் வழங்கி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN