Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பள்ளிகளில் விடுமுறையை முன்னிட்டும், வார விடுமுறை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதன்படி இன்று வார விடுமுறை முதல் நாளில் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் சூரிய உதயத்தை காண திரிவேணி சங்கம கடற்கரையில் திரண்டனர்.பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலில் புனிதநீராடி விட்டு பரசுராம கணபதி கோயில் மற்றும் பகவதி அம்மன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலத்தை சுற்றிபார்க்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்றனர்.
காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மேலும் குற்றசெயல்கள், அசம்பாவிதங்களை தவிர்க்க கன்னியாகுமரி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / vidya.b