Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 28 ஜூன் (ஹி.ச.)
திருச்சி விமான நிலையத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்தார்கள், என்னை வைத்தும் அந்த முயற்சி நடந்தது. ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை.
தேர்தலுக்குப் பின்பு திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு கிடையாது.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இருப்பவர் முதல்வரின் நம்பிக்கைக்குரியவர், அது உட்கட்சி விவகாரம் அரசு பதவி இல்லை அதை முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கு உள்ளது.
காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது. அவருடைய கொள்கைகளை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN