நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு
நாமக்கல், 28 ஜூன் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டி பிரிவு சாலை அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, வேகமாக வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த
Two young men riding a two-wheeler died


நாமக்கல், 28 ஜூன் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டி பிரிவு சாலை அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, வேகமாக வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சுகனேஸ்வரன் மற்றும் முத்தமிழ் ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b