அரசின் போலி பிம்பம் நொறுங்கிவிட்டது; முதல்வர் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தஞ்சாவூர், 28 ஜூன் (ஹி.ச.) தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், சோஃபா மாடல் அரசின் போலி பிம்பம் அ
உதயநிதி


தஞ்சாவூர், 28 ஜூன் (ஹி.ச.)

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், சோஃபா மாடல் அரசின் போலி பிம்பம் அடித்து, துவைக்கப்பட்டு, நொறுங்கிக் கிடக்கிறது. நம்மை கிண்டல் செய்வதாக நினைத்து, முதலமைச்சர் அவரையே அவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார் என்று கூறினார்.

மேலும், தூய சக்தி என்று கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். திமுக தூண்டுதலால் விவசாயிகள் போராடுவதாகக் கூறி அவர்களையே முதலமைச்சர் கொச்சைப்படுத்தியுள்ளார். எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என்ற ரெடிமேட் பதிலை முதலமைச்சர் வைத்திருக்கிறார் என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையின் தரத்தையே ஆளுங்கட்சியினர் குறைத்துவிட்டனர். முதலமைச்சர் விஜய் தன்னைத்தானே 'எக்ஸ்போஸ்' செய்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P