Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஜூன் (ஹி.ச.)
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி, பின்னர் தவெக-வில் இணையுமாறு முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் தன்னிடம் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தனது எக்ஸ் தளப் பதிவில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரண்டு மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி, தவெக-வில் இணையுமாறு @CMOTamilnadu தன்னிடம் பேசியதாக வைகோ வெளிப்படையாகவே கூறியுள்ளார். இது அப்பட்டமான குதிரைப் பேரம் அல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் விஜய் அரசு நடத்தி வரும் குதிரைப் பேர அரசியலை நிரூபிக்க, வைகோ அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூல பேட்டி ஒன்றே போதுமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காத நிலையில், அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ