கடைசி டி20 போட்டி இன்று இந்தியா–அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை
பெல்பாஸ்ட் , 28 ஜூன் (ஹி.ச.) அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி கடந்த வெள்ளிக்கிழமை பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில், இந்திய
A


பெல்பாஸ்ட் , 28 ஜூன் (ஹி.ச.)

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் டி20 போட்டி கடந்த வெள்ளிக்கிழமை பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஏற்பட்ட சொதப்பலை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அயர்லாந்து அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெல்பாஸ்டில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

முதல் போட்டியில் வெற்றி பெற்று உற்சாகத்தில் இருக்கும் அயர்லாந்து அணி, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

அதேநேரத்தில், முதல் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய இந்திய அணி தீவிரமாக போராடும்.

எனவே, தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்க உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA