ஆனி பௌர்ணமி - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நள்ளிரவு முதலே குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை, 29 ஜூன் (ஹி.ச.) ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆனி பௌர்ணமியை முன்ன
திருவண்ணாமலை


திருவண்ணாமலை, 29 ஜூன் (ஹி.ச.)

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதற்கு இன்று அதிகாலை 4.22 மணி முதல் நாளை அதிகாலை 6.11 மணி வரை உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர்.

நள்ளிரவு முதலே அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டவுடன் ஒழுங்காக வரிசையில் சென்று அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயில் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam