ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி - குடிபோதையில் ரகளை செய்த நபர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், 29 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கியக் கோயில்களில் உண்டியல்களை உடைக்க முயன்ற சம்பவங்களும், கோயில் நிர்வாக ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சி -  குடிபோதையில் ரகளை செய்த நபர் கைது


ஸ்ரீவில்லிபுத்தூர், 29 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கியக் கோயில்களில் உண்டியல்களை உடைக்க முயன்ற சம்பவங்களும், கோயில் நிர்வாக ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ள பெரிய விநாயகர் கோயிலில் அரவிந்தன் என்ற அந்த நபர், கோயில் ஊழியர் ஒருவரை தாக்கிவிட்டு கோயிலில் திருட முயன்றதாக கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்த அரவிந்தன், கோயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றபோது, அங்கு பணியில் இருந்த ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள், உடனடியாக அரவிந்தனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அரவிந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான கோயில் ஊழியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற கொள்ளை முயற்சிகளை தடுக்க மேலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b