Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் தொடங்குவதற்கான சிறப்புக் கட்டணத்தை தமிழக அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை ரூ.15 லட்சமாக இருந்த சிறப்புக் கட்டணம், இனி ரூ.30 லட்சமாக வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனமகிழ் மன்றங்கள் அமைக்க அனுமதி பெறுவதற்கான விதிமுறைகளில் இந்தக் கட்டண உயர்வு முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.
இதன் மூலம் உரிமம் பெற விரும்பும் புதிய மன்றங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் மனமகிழ் மன்றங்களை ஒழுங்குபடுத்துதல், உரிமம் வழங்கும் நடைமுறையை வலுப்படுத்துதல் மற்றும் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டுதல் ஆகிய நோக்கங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மன்றங்களுக்கு திருத்தப்பட்ட கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P