சென்னையில் பேரிகார்டை இழுத்துச் சென்றபடி பைக் சாகசம் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் மேற்கொண்ட ஆபத்தான பைக் சாகசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வைரலாகியுள்ள அந்த வீடியோவில், 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்
பைக்


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் மேற்கொண்ட ஆபத்தான பைக் சாகசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரலாகியுள்ள அந்த வீடியோவில், 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் அதிவேகமாக வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சாலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த பேரிகார்டை, பைக்கில் சென்றபடியே இழுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, காவல்துறையின் ரோந்து வாகனம் அருகிலேயே இந்த அத்துமீறல் நடந்ததாக கூறப்படுவதால், போலீசாரின் கண்காணிப்பு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுபோன்ற சாகசங்கள் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வைரலான வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P