Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை , 29 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டனம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பாலாஜியின் 9 வயது மகன் திருமேனிநாதன் குரும்பிவயல் அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(ஜூன் 27) மாலை அதே தெருவில் சக நண்பர்களுடன் விளையாடச் சென்ற சிறுவனைக் காணவில்லை என்று இரவு தேடியுள்ளனர்.
இரவு சுமார் 8.45 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் சிறுவன் வீட்டின் எதிரே உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் புதர் செடிகளுக்கிடையே சிறுவன் இறந்து கிடந்தாான் என்று உடலைத் தூக்கி வந்துள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் மனோகரன், வடகாடு போலீஸார் ஆகியோர் சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
வடகாடு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், திருமேனிநாதனை தனியாக அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, அவரை கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து, 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த சிறுவனின் கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி நெரித்து கொலை செய்ததாக அவன் ஒப்புக்கொண்டுள்ளான்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் சடலம் கிடந்த இடத்தை காட்டச் சொன்ன போது சரியான இடத்தை அடையாளம் காட்டியுள்ளான். விசரானையை தொடர்ந்து போகக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவனை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் சிறுவன் அணிந்திருந்த கால்சட்டை சடலம் கிடந்த குளத்தின் புதருக்குள் கிடக்கிறதா என்று போலிசார் தேடி வருகின்றனர்.
சிறுவனுக்கு சிறுவன் என்ற முறையில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் கறுக்காகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இச்சம்பவம் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தேவை என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b