சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணி
மழை


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P